வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

பேரறிவாளனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப் பட இருக்கிறார்.

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

அதே நேரத்தில் வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிடம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன