வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ஷாக் கொடுக்கும் “இறுதி பக்கம்” கோடங்கி விமர்சனம்

 

அடேய் யார்ரா நீ… மொத படத்துலயே இப்படி ஒரு கதை சொல்ல முடியும் அதையும் அழகா சொல்ல முடியும்னு காட்டியிருக்கும் “இறுதி பக்கம்” இயக்குனர் மனோ கண்ணதாசன்… தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைன்னு பட ரிலீசுக்கு முன்னாடி அலப்பறை கொடுத்த பல இயக்குனர்களை பட ரிலீசுக்கு அப்புறமா தேடினாலும் கிடைக்க மாட்டாங்க… ஆனா இந்த இறுதி பக்கம் கதையும், அது சொன்ன விதமும் கிளைமாக்ஸ் என எல்லாமும் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு.

ராஜேஷ் பாலகிருஷ்ணன் ரொம்ப ஜாலியா வந்து அழுத்தமா பதிந்து போகிறார்.

இயல் ஆக வந்திருக்கும் ஹீரோயின் அம்ருதா நல்ல அழகி அதே நேரம் வெயிட்டான ரோலை ரொம்ப ஈசியா சொல்லிட்டு போறதால அம்ருதா அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகலாம்.

காதல் எது காமம் எது செக்ஸ் அப்படின்னா என்னன்னு தனித்தனியா சொல்றதுலயும் இயக்குனர் மனோ தனி அழகுடா தம்பி.

ஜெனீபரா நடிச்ச கிரிஜா ஹரியும் தன் வேலைய கச்சிதாமா செஞ்சிருக்கு.

பிரவீன்பாலு ஒளிப்பதிவுல பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டுது… பல இடங்களில் “அட” போட வைக்குது… சபாஷ் பிரவீன்

இசையிலும் ஜோன்ஸ் பேசப்படுகிறார்.

மொத்தத்துல சின்ன டீம் ஒரு அழகான கதையை ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க.

இதுல போலீஸ் இல்ல வில்லன் இல்ல ஹீரோயின் கேரக்டர் பிரபலம் நடிச்சிருந்தா இந்த இறுதிபக்கம் வசூலில் முத பக்கத்துல இடம் பிடிச்சிருக்கும்.

எல்லாம் சரி… கதை என்னன்னு கேக்குறீங்களா… ஒரு பெண் எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதி முடிக்கிறார் அடுத்ததாக மர்ம நபரால் அவர் கொல்லப்படுகிறார்.
அவரை கொன்றது யார்? எதற்காக கொன்றார்கள்? போலீஸ் யார்? இப்படி பல டிவிஸ்ட் வைத்து கிளைமாக்ஸ் ஷாக் ரகம்!

படக் குழுவுக்கு வாழ்த்துகள்.

– கோடங்கி

238 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன