திங்கட்கிழமை, மே 20
Shadow

நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம்

சேவை வரி செலுத்தாததால், நடிகர் விஷாலுக்கு எழும்பூர் நீதிமன்றம் 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஷாலின் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததை கண்டறிந்தனர்.

அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகர் விஷால் ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்ததால் வருமானவரித்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சேவை வரித்துறையில் அவர் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாகவும், அதனால் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன