திங்கட்கிழமை, மே 4
Shadow

இன்றைய தலைப்புச் செய்திகள்

# ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாள்தோறும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

# புதுச்சேரியில் தியேட்டர், கடை வீதிகள், பஸ்கள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் – துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன்

# தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு முதல் நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் 41 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது.

# ஒமைக்ரான் பரவல் எதிரொலியால் ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

# திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்த குடம் எடுத்து கையில் வேப்பிலையுடன், உற்சாக நடனமாடினார்.

# புதுச்சேரியில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

# மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

#புதுக்கோட்டை அருகே தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுவன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

#ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரண் அடைய வேண்டும் அல்லது முன்ஜாமின் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

#வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அடிப்படை வசதிகளே இல்லாத இடங்களில் திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு உரிமம் அளித்தது எப்படி என்று மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

#தமிழகத்தில் மேலும், 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாள் தொற்று 800-ஐ நெருங்கியுள்ளது.

#பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என்று பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

# தென்காசியில் 3 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

# தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

# 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

#அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

# சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் திருப்புகழ் குழு 90 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மழை நீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளது.

# ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

# மயிலாடுதுறையில் பரிமள ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து முதல் நாள் நிகழ்ச்சியில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா எழுந்தருளினார்.

# இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 750 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 22 விழுக்காடு அதிகமாகும்.

# ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட்டி போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.

485 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன