புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக இருந்து வந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வலிமை அப்டேட் கேட்டு பேனர் பிடித்த வெறித்தனமான ரசிகர்களுக்கு விருந்தளிக்க வலிமை பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகும் என அறிவிகப்பட்டது.

உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பட ரிலீசை எதிர் நோக்கி இருந்தனர்.

இந்த சூழலில் வைரஸ் பாதிப்பும், ஒமைக்ரான் பரவலும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாவதால் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

முதற்கட்டமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட தடை விதித்தும் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்ட வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது உள்ளார்.

410 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன