சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

 

 

 

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது.

முன்னாள் கவர்னர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படது.
மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது . முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது.  வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது என கூறினார்.
சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பப்பட்டது.
564 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன