செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

 

 

சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட பதிவுகள் ஒரு சில மணி நேரங்களிலே பலரை சென்றடைந்து விடும்.

இதற்கு முக்கிய காரணம் அந்த பதிவின் தரமும், அதை வழங்கி இருக்கும் விதமும் தான்.

அந்த வகையில் சில வீடியோக்கள், படங்கள், மீம்ஸ் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக சமீப காலமாக சிறிய அளவிலான பாடல் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

 

https://www.instagram.com/reel/CYy1-rypgH3/?utm_source=ig_embed&ig_rid=622c8711-a2a3-4cd8-923a-1103c7003b9d

 

அதன்படி சில வாரங்களாக வைரலாகி வந்த ஒரு துள்ளலான பாடல் தான் ‘ஊ அண்ட்டவா மாமா’ என்கிற தெலுங்கு பாடல். இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவர்ந்தது. குறிப்பாக தெலுங்கு மொழியில் மிகவும் வைரலான் பிறகு, தமிழ் மொழியில் ஆண்டிரியா குரல் வழியாக இந்த பாடல் ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளோடு வெளியானது. இது தெலுங்கு வெர்ஷனை விடவும் பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆண்டிரியாவின் வசீகரமான குரல் தான்.

 

இந்த பாடலை இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் செய்துள்ளனர். அவற்றில் மிக சில ரீலிஸ் மட்டுமே இந்த பாட்டை போன்றே மிகவும் பிரபலமாகி வந்தது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புகழ் கிலி பால் அவர்களும் ‘ஊ அண்ட்டவா மாமா’ தெலுங்கு பாடலுக்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். இவர் தான்சானியா நாட்டை சேர்ந்தவர். இது போன்று பல பாடலுக்கு இவர் ரீலிஸ் செய்துள்ளார். தற்போது இந்த ரீலிஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

311 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன