திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

 

மதுரைக்கு இன்னொரு பெயர் ‘மருத’.

அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் ”மருத”

சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கை.

ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு அண்ணன் சரவணன் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக அளவுக்கு  அதிகமாக செய்முறை செய்கிறார்.

கிடைத்த செய்முறை பணத்தை மாரிமுத்து குடித்தே அழிக்கிறார்.

 

பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தாரால் அதே அளவு செய்முறை செய்ய முடியாமல் போகிறது..

இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி , ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த,

அவமானம் தாங்காமல் மாரிமுத்து தூக்கில் தொங்கி விடுகிறார்.

இதில் இரு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகையாக மாறுகிறது.

செய்முறை பணம் வராத ஆத்திரத்தில் இருக்கும் விஜி மகளுக்கு திருமண எற்பாடு செய்கிறார்.

அப்போது செய்முறை பணத்தை வந்து கொடுக்கும்படி ராதிகாவை மிரட்டுகிறார் விஜி.

இந்நிலையில் விஜி மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த காதல் தெரிய வரும் விஜி ஆவேசத்தின் உச்சத்திற்கு போய் மகளையே தூக்கில் தொங்க விட்டு உயிர் பயம் காட்டுகிறார்.

செய்முறை பணத்தை எப்படியாவது கொடுக்க போராடும் ராதிகா ரத்தவாந்தி எடுக்கிறார்.

கடைசியில் செய்முறை பணத்தை ராதிகா கொடுத்தாரா? காதல் ஜோடி என்ன ஆகிறது?

என்பதை கிராமத்து பாணியில் சொல்லியிருக்கிரார் இயக்குனர்.

செய்முறை, மொய்விருந்து இப்படி பல அடைமொழிகளில் நடைபெறும்

தென்மாவட்ட யதார்த்தமான கதையில் அழுத்தமான காட்சிகள் என விஜி,

வேல ராமமூர்த்தி ஆகியோரின் ஓவர் ஆக்டிங் காட்சிகளும்,

தேவை இல்லாமல் சத்தமாக கத்திப் பேசுவதும் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிரது.

 

பாவப்பட்ட அம்மாவாக ராதிகா தான் ஒரு சீனியர் நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

உருப்படாத மகனை பெற்று விட்டோமோ என்று கண்களில் அவர் காட்டும் சோகம் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்கிறது.

செய்முறை பணத்தை அண்ணன் கையில் திணித்து விட்டுப்போகும் இடத்தில்

‘ஒண்ணுமே சொல்லாம போறிய தாயி’ என்று அண்ணன் கேட்க, ‘என்னத்தை சொல்றதுண்ணே’ என்று கேட்டு,

அண்ணன் குடும்பத்தால் தனக்கு நேர்ந்த பாதிப்புக்களை பட்டியலிடும் இடத்தில் பார்ப்பவர் கண்கள் ஈரம் கசியும்.

கஞ்சா கருப்பு காட்சிகள் அனைத்தையும் வெட்டி தூற எறிந்தாலும் படத்துக்கு எந்த பாதகமும் ஏற்படாது.

சரவணனுக்கு நல்ல ரோல் இருந்தாலும் இன்னமும் அதில் தெளிவு இருந்திருக்கலாம். உருப்படாத ஹீரோ ரோல்…

நடிப்பும் பெருசாக எடுப்டவில்லை. இன்னமும் பயிற்சி தேவை அவருக்கு.

வில்லி கேரக்டரில் வரும் விஜி மிரட்டியிருக்கிறார்.

செய்முறை பணத்துக்காக ராதிகாவை நடுரோட்டில் உட்காரவைத்து கறி சோறு போட்டு சாப்பிட

வைத்து அவமானப்படுத்தும் இடத்தில் விஜியின் வில்லத்தனம் ரொம்ப குரூரம்.

விஜியின் மகள் லவ்லின் தான் ஹீரோயின் . நடிப்பு வரனும்னு அவசியமே இல்ல…

அந்த பெரிய கண்களை லேசாக உருட்டினாலே நடிப்பு வந்துடும்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.

கிராமங்களில் நடக்கும் செய்முறை நடைமுறை ஏற்படுத்தும் விபரீதத்தை திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் கவனம் செலுத்தியிருந்தால் மருத பேசப்பட்டிருப்பான்.

-கோடங்கி

மதிப்பீடு ; 2.5/5

511 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன