வியாழக்கிழமை, மே 16
Shadow

பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – மத்திய அரசு வேண்டுகோள்!

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார்.
இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் ஆளுங்கட்சியாக இருந்தாலும் , எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒவ்வொரு குழுவும் ஒன்றாக அமர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்வதைக் கேட்டு அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கு ஏற்ப, உள்ளடக்கிய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
இது அனைவருக்கும் பயனளிக்கும் என்று மற்றொரு நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
179 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன