திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்கு ஆசைப்பட்டு தரகரை கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 300 கோடி மதிப்புள்ள பிட்காயின் கிரிப்டோகரன்சியை அபகரிப்பதற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தரகரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புனே போலீஸ் கூறியதாவது:-
புனே சைபர்கிரைமில் வேலை பார்த்துவந்த கான்ஸ்டபிள் திலிப் துக்ரம் காந்த்ரே என்பவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோகரன்சி தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் இருந்து பிட் காயினை அபகரிக்க அவர் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
கடந்த மாதம் 14-ம் தேதி விஜய் நாயக்கை ஹோட்டலில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதை தொடர்ந்து கடத்தப்பட்டவரின் நண்பர் போலீசிடம் புகார் அளிக்க, 8 பேரும் சேர்ந்து கடத்தியவரை சாலையில் விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து விஜய் நாயக் கடத்தியவர்களை அடையாளம் காண்பிக்க அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன