திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன்!

2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் சிபி சத்யராஜ்.

அதன்பின் அவருடைய தந்தை சத்யராஜுடன் சேர்ந்து மன்னின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜேக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கபடதாரி படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இவர் நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம், ரேஞ்சர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

 

அதன்பின் அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கும், புதிய படத்தில் சிபி நடிக்க உள்ளார். இவரின் 20-வது  படமாக இது உருவாகிவருகிறது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருடன் பணியாற்றியிருக்கிறார்.

இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இந்தப் படத்தை ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன