ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

 

நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியிருக்கும் டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இவையனைத்திற்கும் மேலாக சில தினங்களுக்கு முன்பு வெளியான அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர்.

பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அரபிக் குத்துபாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா தனது ஸ்டைலில் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். லேட் இரவில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கையில் நடனமாடியுள்ளார் சமந்தா.

அந்த வீடியோவிற்கு அனிருத், ப்ரியா அட்லீ, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள் எமோஜிக்களால் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்

672 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன