
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குனர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்குமுன் ‘கேங் லீடர்’, ‘ஜெர்சி’ படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் இவர் கால்பதித்திருக்கிறார்.
தற்போது அனிருத் இப்படத்தில் இணையவுள்ளதாக வரும் தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
353 Views
