புதன்கிழமை, மே 15
Shadow

ஆர்.ஆர்.ஆர். படைக்கும் தொடர் சாதனை!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர்.
இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர். வெளியான ஒரு வாரத்தில் ரூ.710 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
145 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன