
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.
போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராக வில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக வில்லை.
இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய வாரண்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
