வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சிறையிலிருந்த கணவனை 15 நாள் பரோலில் எடுத்த மனைவி!

சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம் கணவனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் நந்த் லால். கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இவர், ஆயுள் கைதியாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில், தனது கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் கணவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று ரேகா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில் நீதிமன்றம் முடிவு ஏதும் செய்யாமல் இருந்தது. இதையடுத்து ரேகா உயர் நீதிமன்றத்தை நாடினார்.

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டம் அளித்த உரிமை மற்றும் பல்வேறு மதங்களின் கோட்பாடுகளை குற்றவாளி நந்த் லாலின் மனைவி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் பர்சாந்த் அலி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனு விசாரித்தது. முடிவில் ரேகாவின் கணவர் நந்த் லாலுக்கு 15 நாட்கள் அவசர பரோலை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘தம்பதிகள் திருமணம் ஆனது முதல் தாம்பத்ய உறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. கணவர் செய்த குற்றத்திற்காக மனைவி பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது.

இது மனைவியின் உரிமையை பாதிப்பது போல் உள்ளது. தம்பதிகளுக்கு அவர்களது அடுத்த தலைமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.

இதனை அனைத்து உயர்ந்த கொள்கைகளும், இந்திய கலாசாரமும், பல்வேறு நீதி முடிவுகளும் நமக்கு தெரிவிக்கின்றன’ என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

514 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன