வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9
Shadow

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை ஸ்வீட் கொடுத்து கோலாகலமாக வீட்டில் கொண்டாடிய மு.க. ஸ்டாலின்

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

நாடே பெரிதும் எதிர்பார்த்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார்.

இந்த தீர்ப்பை வரவேற்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம். திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது.

அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி போடப்பட்டதுதான் இந்த வழக்கு. குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு மகிழ்ச்சிக்குரிய ஒன்று. திமுக எந்த தவறும் செய்யவில்லை என்று சிறப்பு நீதிமன்றம் நிரூபித்து விட்டனர். 2ஜி வழக்கு போடும்போது ஊடகங்கள் ஆர்வத்துடன் மக்களிடம் கொண்டு சேர்த்தீரோ அது போன்று இந்த விடுதலை செய்தியையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன