
தயாரிப்பாளர் கே.ராஜன், “’தொடாதே’ பாடல்களையும் டிரைலரையும் பார்த்த போது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
காதல் சுகுமார் காமெடி நடிகராக இருக்கும் போதே அவரை நான் ரசித்து பார்ப்பேன். இன்று ஹீரோவாக நடிக்கிறார் அவர் நிச்சயம் நன்றாக நடித்திருப்பார்.
சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள், உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம், பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம்.
பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய் தான் வசூலிக்கிறது.
ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள்.
இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.
100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா, அதிலும் நஷ்ட்டம் தான் வருகிறது.
நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லல. நீங்கள் வேற மாதிரி போட்றாதீங்க.
இப்ப கூட என்ன வெளியில் பேட்டி எடுத்தாங்க, அரை மணி நேரம் எடுத்த பேட்டில், பீஸ்ட் படம் பற்றி என் கிட்ட கேக்குறாங்க, பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன, என் கிட்ட பீஸ்ட்…பீஸ்ட்…என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை.
காரணம், நான் விஜய் கிட்ட தேதி கேட்டு நிக்க போறதல்ல, பணம் கேட்டு நிக்க போறதல்ல.
தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காக தான் நான் குரல் கொடுக்கிறேன், தொடர்ந்து கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன்.
மதுவால் ஏற்படும் தீமைகளை சொல்லும் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். மதுவால் ஏழைகளின் குடும்பமும், அவர்களுடைய வருமானமும் எப்படி பாதிக்கப்படுகிறது, என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
அதனால் தான் என் பகுதியில் இருக்கும் பல மதுக்கடைகளை மூட நான் முயற்சித்து வருகிறேன்.
இப்போது கூட இது பற்றி முதல்வர் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன், அவரை அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்
