
”VKAN V Solution Private Limited” என்னும் மென் பொருள் நிறுவனம் 3 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான FEFDY பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உயர்திரு மனோ தங்கராஜ், சுகாதாரம், திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர், திரைப்பட நடிகர் திரு. தமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது, ”இது திருமதி விமலாராணி பிரிட்டோ அவர்கள் இரண்டு குழந்தைகளின் தாய், இப்பொழுது மூன்றாவது குழந்தைக்கும் தாயாக மாறி இருக்கிறார்கள்.
ஆம், இந்த கல்வி மேம்பாட்டிற்கான மென்பொருள் ஆஃப் ஆனது விமலாராணி மூன்று ஆண்டுகள் கருவாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை. எப்பொழுதுமே பிஸியாக தன்னை வைத்துக் கொள்பவர் விமலாராணி பிரிட்டோ. அவர்களுக்கு என் ஆழமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் பேசும் போது, ஒரு கலைஞனுக்கு அழியாத நினைவுப் பரிசு என்பது மேடையில் போர்த்தப்படும் சால்வைகளோ கொடுக்கப்படும் நினைவுப் பரிசுகளோ அல்ல..
ரசிகர்களாகிய உங்களின் சிரிப்பொலிகளும் கரவொலிகளும் தான். விமலாராணி பிரிட்டோ பேசும் போது ஒரு வார்த்தைக் கூறினார் “வலியில் இருந்து தான் சாதனைகள் தோண்றும்” என்று உண்மைதான்.
நான் என் குடும்பத்தில் மூன்றாவது குழந்தை எனக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் என் அப்பாவின் மொத்த பாசமும் என் தங்கையை நோக்கி திரும்பிவிட்டது. அப்போதிலிருந்து என் தந்தையின் கவனத்தை கவர்வதற்காக வேறு வேறு குரல்களில் பேசத் துவங்கினேன்.
அதுவே இன்று என் அடையாளமாகி இருக்கிறது. நானும் புறக்கணிக்கப்பட்ட வலியில் இருந்தே தோன்றியவன். என் பேரக் குழந்தைகள் ஆன்லைனில் பாடம் படிக்கும் போது சிறிது நேரத்திலேயே விளையாடவோ அல்லது டிவியில் ரைம்ஸ் பார்க்கவோ சென்றுவிடுவார்கள்.
விமலாராணி பிரிட்டோ அவர்கள் சிறுவர்கள் விரும்பும் ரைம்ஸ் மற்றும் விளையாட்டை கலந்தே அவர்களுக்கான பாடங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதுவே அவர்களுக்கான முதல் வெற்றி. என் இயற்பியல் வாத்தியார் சில இடங்களில் நீ புரோட்டான் மாதிரி அமைதியாக இரு, இன்னும் சில இடங்களில் எலெக்ட்ரான் போல் எடை குறைவாக இரு,
இன்னும் சில இடங்களில் புரோட்டான் போலவும் இல்லாமல் எலெக்ட்ரான் போலவும் இல்லாமல் நியூட்ரலாக இரு” என்று வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்தே தான் புகட்டினார்கள்.
FEFDY பாடத்திட்டமும் வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்தே தான் கற்றுக் கொடுக்கவிருக்கிறது.
இந்த முன்னெடுப்பை தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் எடுத்து செல்ல எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறோம்” என்று பேசினார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உயர்திரு மனோ தங்கராஜ் பேசும் போது, ”நம்முடைய கல்விமுறையில் பல மாற்றங்கள் வரவேண்டும் என்று விரும்புபவன் நான். வாழ்க்கை முறைக்கும் நம் கல்விமுறைக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னை அப்படி யோசிக்க வைக்கிறது.
கொரோனா தொற்றுப் பரவலின் போது கைகளை கழுவும்படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் கூட வலியுறுத்த வேண்டிய இடத்தில் தான் தற்போதைய கல்வி நம் மக்களை வைத்திருக்கிறது.
ஆன்லைன் கல்வி முறை இப்பொழுது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதால் இது போன்ற App-களும் தவிர்க்க முடியாதது.
ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். இன்று செல்போனை தடை செய்தால் இந்த உலகமே அப்படியே நின்றுவிடும்.
இது போன்ற learning Apps கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இடையே உள்ள கற்றல் தொடர்பான இடைவெளியை வெகுவாக குறைக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பணிகள் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை சேவியர் பிரிட்டோ தம்பதியருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
