புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம்- கவிஞர் வைரமுத்து ரம்ஜான் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, ரம்ஜான் பண்டிகையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மெய்வருத்தம் ஏற்று
சக மனிதனின்
துயர் உணர்கிறது

ஈகையை
வாழ்க்கையின் பாகமாக்குகிறது

சமூக வாகனத்திற்கு
சகோதரத்துவமே
சக்கரம் என்கிறது

உலக நாடுகளின்
கொடிகளிலெல்லாம்
சமாதானப் பூக்களையே
யாசிக்கிறது

ரமலானை
வகுத்தவர்களையும்
வாழ்கிறவர்களையும்
வாழ்த்துகிறேன்

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன