வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: vairamuthu

இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார் – கவிஞர் வைரமுத்து தகவல்!

இயக்குனர் பாரதிராஜா நலமோடு இருக்கிறார் – கவிஞர் வைரமுத்து தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரம...
சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம்- கவிஞர் வைரமுத்து ரம்ஜான் வாழ்த்து!

சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம்- கவிஞர் வைரமுத்து ரம்ஜான் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, ரம்ஜான் பண்டிகையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் பூக்களையே யாசிக்கிறது ரமலானை வகுத்தவர்களையும் வாழ்கிறவர்களையும் வாழ்த்துகிறேன் இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்....
‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

‘இந்தி’யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்துவின் கண்டன டுவிட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் நேற்று பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம் தெற்கே வாழவரும் வடவர் தமிழ் கற்கலாம் மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் இதற...
போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். டுவிட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:- மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார்....
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து!

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து! மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு ...
இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் - அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து   கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது. இந்த வினாவைப் போகிற போக்கில் புறந்தள்ள முடியாது. ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆதிக்கத்தின் அம்பறாத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது. தலையால் சிந்திக்கிற யாரும் இப்படி ஒரு வினாவை வீசியிருக்க முடியாது. மீண்டும் எங்கள் நெருப்பு தன்மீது பூத்திருக்கும் நீறுகளைக் காற்றில் ஊதிக் கங்கு காட்ட வேண்டிய காலம் இது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நோக்கி மட்டும் கேட்கப்பட்...
எம்பி பதவியேற்பின் போது  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

எம்பி பதவியேற்பின் போது தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து சமீபத்தில்நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கடந்த இரு தினங்களாக பதவி ஏற்றனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.’’ என பதிவிட்டுள்ளார். வைரமுத்து பதிவிட்ட வாழ்த்து வைரல் ஆ...
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா...
மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார். இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகள...