வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

மீடூ புகாரில் பிரபலமான சின்மயிக்கு செக் வைத்த ராதாரவி..!

தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி வருபவர் பாடகி சின்மயி. இவர் பல படங்களுக்கு பின்னணி வசனங்களையும் பேசியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பின்னணி வசனம் பேசினார்.
இவர் மீடூ விவகாரத்தில் கடந்த அக்டோபரில், கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதாரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு பாடகி சின்மயி ஆதரவாக பேசினார். இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படம் ஆக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் அந்த சங்கத்தின் சட்டதிட்டங்களை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படியிருக்கும்போது ஆண்டுதோறும் சங்கத்திற்கு சந்தா செலுத்த வேண்டும் என்பதை தெரியாதவரா பாடகி சின்மயி… அல்லது சந்தா தொகை கூட இல்லாமல் இருக்கிறாரா சின்மயி என்ற சந்தேகம் எல்லாருக்கும் ஏற்படுவது இயல்பு.
தன் உறுப்பினர் பதிவையே ஒழுங்காக புதுப்பிக்க தவறிய சின்மயி பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தை மட்டும் எப்படி அத்தனை நினைவாக வைத்திருந்து வைரமுத்து மீது குற்றம் சுமத்த முடிந்தது என்பதும், அந்த குற்றத்திற்கான ஆவணங்கள் என்று சின்மயி சொன்ன பல விஷயங்களை இன்னமும் அவர் தேடிக் கொண்டிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
எப்போதும் தன் பெயரும் தானும் பரபரப்பு செய்திகளில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சின்மயி குற்றச்சாட்டு கூறிய நேரத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் நடிகர் ராதாரவி. பல பொது மேடைகளில் சின்மயியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதோடு, சின்மயிக்கு யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள் அதனாலே அந்த பெண் இப்படி செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் ராதாரவி. அப்படி கடும் எதிர்ப்பு தெரிவித்த ராதாரவிதான் டப்பிங் யூனியன் தலைவர் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
இதற்கு காரணம், பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பல நாட்கள் கடந்தும் இதுவரை வைரமுத்து மீது போலீசில் புகாரோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கோ சின்மயி தொடரவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆக, பரபரப்புக்காக மட்டுமே இந்த பாலியல் மீடூ விவகாரத்தை சின்மயி கையில் எடுத்திருக்கிறார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு.
எது எப்படியோ சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தியையும் தனது பரபரப்புக்கு சின்மயி பயன்படுத்திக் கொள்ளாமல் அமைதி காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
சின்மயி குற்றச்சாட்டு கூறிய நேரத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் நடிகர் ராதாரவி. பல பொது மேடைகளில் சின்மயியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதோடு, சின்மயிக்கு யாரோ சொல்லிக் கொடுக்கிறார்கள் அதனாலே அந்த பெண் இப்படி செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் ராதாரவி. அப்படி கடும் எதிர்ப்பு தெரிவித்த ராதாரவிதான் டப்பிங் யூனியன் தலைவர் என்பது குறிப்பிடதக்கது.
380 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன