சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் திடீர் ஆய்வு!

 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்கள் வீட்டு வசதி வாரியத்தின்
சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக
452.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1891 வாடகைக் குடியிருப்புகள் கட்டுமான பணிகளை இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கினார்.

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியவர் கட்டுமான பொருட்களை பொறுத்தவரை ஒப்பந்த புள்ளிகளில் இடம்பெறும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொருட்களின் தரத்தை பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகே பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் கால தாமதம் குறித்து ஆலோசனை நடத்தியதுடன் குடியிருப்பில் பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு அலுவலர்கள் உடன் இருக்கவும் பணியாளர்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தினார்.
மேற்பார்வை பொறியாளர் குணசேகரன், செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் பொற்கொடி, உதவி பொறியாளர் சிவகணேஷ், இளநிலை பொறியாளர் சத்யசாய், சென்னை மாநகராட்சி 10 வது வார்டு குழு மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி
உள்பட
துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன