வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

”நீதி நிச்சயம் வெல்லும்” குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ் டுவிட்

கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. லாலு பிரசாத் யாதவ், பிர்சா           முண்டா    சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார். தனக்கு எதிராக தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில், நீதி நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:- “ உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக வலிமையான பொய் மூலம் பிரச்சாரம் நடக்கிறது. பொய் பாதி தூரம் பயணப்பட்டுள்ளது. ஆனால், உண்மையை மூடி மறைத்து சூழ்ந்துள்ள பொய், விரைவில் நீக்கப்பட்டு உண்மை வெளிப்படும். இறுதியில் உண்மை வென்றே தீரும்.
நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியுற்றிருந்தால் அவர்களை வரலாறு வில்லன்களாகதான் சித்தரித்து இருக்கும். எனது தர்மயுத்தத்தில் ஒட்டுமொத்த பீகாரும் எனக்குத் துணையாக நிற்கிறது. எனக்கு நீங்கள் தொந்தரவு கொடுக்கலாம்; ஆனால் என்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
411 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன