சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

போத்தனூர் தபால் நிலையம் கோடங்கி விமர்சனம்

 

Casting : Praveen, Anjali Rao, Venkat Sundar, Jagan Krish, Seetharaman, Sambath Kumar, Deena Angamuthu

Directed By : Praveen

Music By : Tenma – Allen Sebastian (Additional Background Score)

Produced By : Passion Studios – Bicycle Cinemas

 

தமிழ் சினிமாவில் சமீபத்திய புதுவரவு இயக்குனர்கள் எல்லாம் தங்கள் முதல் படைப்பில் “சபாஷ்” வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் ஹீரோ கம் இயக்குனர் பிரவீனுக்கும் “சபாஷ்” போடலாம்!

1990 கால கட்ட கதை. பொதுவாக பீரியட் கதைகளில் காட்சிகளுக்கும், உடைகளுக்கும் பயன்படுத்தும் பொருட்களுக்கும் அதிக கவனம் கொடுத்தால் கதையை யாரும் கவனிக்க மாட்டார்கள்.

ஆனால், பிரவீன் இந்த இரண்டிலும் நன்றாகவே அடித்து ஆடி இருக்கிறார்.

கதைப்படி, கம்ப்பூட்டர் தொழில் செய்ய கடனுக்கு அலைகிறார் நாயகன் பிரவீன். அவனது அப்பா போத்தனூர்தபால் நிலய அதிகாரியாக இருக்கிறார். அந்த தபால் ஆபீசுக்கு டெபாசிட்டாக வந்த 7 லட்சம் காணாமல் போகிறது. அந்த பணத்தை கண்டுபிடிக்காமல் விட்டால் அப்பாவுக்கு சிக்கல், அதே நேரம் தனது தொழிலுக்கும் சிக்கல் என்பதால் பணத்தை தேடுகிறார்… பணத்தை கண்டுபிடித்தாரா? என்ன ஆனது என்பதுதான் கதை.

90 கால கட்ட கதை என்பதால் லொகேஷஙளுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் பிரவீன். நடிப்பிலும் பாஸ் மார்க்தான். இதில் சபாஷ் போடவேண்டியது  ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் செய்த ஒளிப்பதுவுதான்.

ஒரு பீரியட் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை அத்தனை அழகாக காட்சிப்படுத்தி, ஒரே ஒரு கலர் டோனை படம் முழுவதும் பயன்படுத்தியிருப்பது நம்மையும் 90க்குள் அழைத்து செல்கிறது.

தென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் போத்தனூர் த்பால் நிலையம் ஒரு எட்டு போய் பார்க்கும் ரகம்தான்.

ஆஹா ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருப்பதால் வீட்டிலேயே இந்த தபால் ஆபீசை பார்த்து ரசிக்கலாம்.

 

 

மதிப்பீடு – 3/5

 

கோடங்கி

163 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன