திங்கட்கிழமை, ஜூலை 6
Shadow

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ‘செம்பி’ படத்தின் டிரெய்லர்!


2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன்.

கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது இவர் இயக்கும் படம் ‘செம்பி’. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.  இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘செம்பி’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, இதன் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.
வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
291 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன