சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மீனா கணவர் மறைவு!

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக ‘தெறி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர்கரும் இயக்குனருமான சுந்தர்.சி மற்றும் நடிகர் நாசர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

287 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன