புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

டி பிளாக் கோடங்கி விமர்சனம்

டி பிளாக் கோடங்கி விமர்சனம்

 

வெள்ளியங்கிரி நடுக்காட்டுல ஒரு என்ஜினியரிங் காலேஜ்.அந்த காலேஜ் உள்ள இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல்  D- Block. கட்டடத்துல இருக்கு.

ஹாஸ்டல் அப்படீன்னாலே ஏகப்பட்ட கண்டீஷன்ஸ் இருக்கும். அதுலயும் லேடிஸ் ஹாஸ்டல்னா சொல்லனுமா என்ன.

எங்க சுத்துனாலும், 6 மணிக்குள்ள ஹாஸ்டலுக்குள்ள வந்திறனும். இராத்திரி 9 மணிக்கு மேல மொட்ட மாடிக்கு போகக்கூடாது. 10 மணிக்கு மேல ரூம்ல லைட் எரியக்கூடான்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்றார் வாடன் உமா ரியாஸ்.

இதுக்கெல்லாம் காரணம்… ராத்திரியில அங்க புலி நடமாட்டம் இருக்கும்னு ஷாக் குடுக்குறார் இயக்குனர் எருமசாணி விஜய்.

புலி வர்ற எடத்துல எப்படிடா காலேஜ் நடத்துறீங்கன்னோ… இராத்திரில வர்ற புலி பகல்ல வராதான்னோ கேள்வி எல்லாம் கேக்காம படம் பாத்தா படம் விறுவிறுப்பா இருக்கும்…

இத நம்ப வைக்கறதுக்காக சில பொண்ணுங்க மர்மமா இறந்து போறாங்க… அவங்களை எல்லாம் புலிதான் அடிச்சி கொன்னுடுச்சின்னு நம்ப வைக்க டிரை பன்றாங்க… எல்லாரும் நம்புனாலும் ஹீரோ அருள் நிதி நம்பாம அந்த மர்மத்த கண்டுபுடிக்க கிளப்புறாரு…

உண்மையில புலி இருக்கா… அந்த பொண்ணுங்க செத்தது எதனாலன்னு அருள் நிதி கண்டுபுடிச்சாரா இல்லியான்றதுதான் டி பிளாக்.

 

அருள் நிதி காலேஜ் பையன் மாதிரி நல்லா ஸ்லிம்மா அழகா அவர் கேரக்டரை செஞ்சி முடிச்சிட்டாரு. வழக்கமா அருள் நிதி ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட டிரை பன்னுவாறு… இதுல அவர் எங்கயோ கொஞ்சம் கோட்டை விட்டுட்டாருன்னுதான் சொல்லனும்.

கதைய விட திரைக்கதைதான் ஒரு பட்த்தை ஹிட் அடிக்க வைக்கும்… இதுல அந்த விஷயத்துல எரும சாணி விஜய் ரொம்பவே கோட்டை விட்டுட்டாருன்னுத்தான் சொலனும்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் டி பிளாக் பேசப்பட்டிருக்கும்.

 

ஹீரோயின் அவந்திகா மிஷ்ரா பெருசா இவங்களுக்கு நடிக்க ஸ்கோப் இல்ல… இருந்தாலும் அழகா இருக்கார்.

ஒரு சீன்தான் வரும் கரு. பழனியப்பன் பேசும் வசனங்கள் பஞ்ச். வில்லனா முயற்சித்திருக்கார்… அவர் முகத்துக்கு வில்லத்தனம் எடுபடல. அவரோட எண்ட்ரிக்கு அவ்ளோ பில்டப் தேவையே இல்ல.

அங்கொன்னும் இங்கொன்னுமா காட்சிகளை பார்த்தா மாதிரி இருந்தாலும் பின்னணி இசையிலயும், ஒளிப்பதிவுலயும் டி பிளாக்கை ரசிக்க வைச்சிருக்கார் இயக்குனர்.

இதுதான் முதல்படனு சொல்ல முடியாத அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.

இன்னும் கொஞ்சம் மேக்கிங்கில் கவனம் செலுத்தியிருந்தா டி பிளாக் த்ரில்லர் பெருசா பேசப்பட்டிருக்கும்.

 

கோடங்கி

மதிப்பீடு – 3/5

 

 

290 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன