திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை  கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனும், ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

436 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன