சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது விஷால் காயமடைந்த நிலையில் அவர் மீண்டும் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன