
லூசிபர், பிரித்விராஜ், prithviraj, luciferமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.
இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
இப்படத்திற்கு ‘எம்புரான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#L2E EMPURAAN. The journey begins. ???????? https://t.co/9phSeMGtqV@Mohanlal #MuraliGopy @antonypbvr @aashirvadcine pic.twitter.com/yQEV1uo0cR
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 17, 2022
