
தமிழ் சினிமாவில் சொல்ல முடியாத கதைகளையும், காட்ட முடியாத காட்சிகளையும் மிக வெளிப்படையாக பிரதிபலிக்கும் ஒரு இடமாக மாறியுள்ளதுதான் வெப் சீரியஸ்.
இந்திய மொழிகளில் இந்தியில் மிகசுதந்திரமாக உலா வந்த காமம், காதல், ஆக்ரோஷம், கொலை, ஆபாசங்கள் அனைத்தும் இப்போது தமிழையும் ஆக்ரமித்துள்ளது.
சம்பத்தில் ஒரு வெப் சீரியஸ் பார்த்தேன் . அதை அப்படி சொல்வதற்கு பதில் “நீலப் படத்தை” கொஞ்சம் ஆடைகளோடு பார்த்தேன் என சொல்லலாம்.
ஆனால் இந்த “தமிழ்ராக்கர்ஸ்” வெப் சீரியஸ் கொஞ்சம் புதுசாய் ஒரு தினுசாய் இருக்கிறது . வெப் சீரிஸ் என்றால் முழு படைப்பு சுதந்திரம் என்று நினைத்துகொண்டு அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தை பேசுவது, பாலியல் காட்சிகளை திணிப்பது, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை ஓட விடுவது, சம்மந்தமே இல்லாமல் அலற விடுவது என்றில்லாமல் பார்க்கிற அனைவரையும் அடுத்த எபிசோடு என்ன என்று ஒரு ஆவலை தூண்டும் சூழலை உருவாக்க வேண்டும்.
சமீபத்தில் களவாணி விமலின் “விலங்கு” அப்படி ஒரு கவனம் ஈர்த்த்து. அதற்கு பின் இப்பொழுது தமிழ் ராக்கர்ஸ் பரவாயில்லை.
அருண் விஜய் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். இதுவரை நான்கைந்து படங்களில் போலிஸ் அதிகாரியாக நடித்த அனுபவமோ என்னவோ அருண் விஜய் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
நான்காவது எபிசோடில் கடைசி நிமிடங்களில் வந்தாலும் எம் எஸ் பாஸ்கர் தனக்கென தனி இடம் பிடித்துக் கொள்கிறார். இயக்குனர் அறிவழகன் இப்போதுள்ள இளசுகளின் மனசை புரிது கொண்டதால் படைப்பில் ஜெயிக்கிறார். மிக பிரமாண்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஏவிஎம் வெப்சீரிஸிலும் நுழைந்திருப்பது வரவேற்ப்புக்குறியது!
-கோடங்கி
