வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி !

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

304 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன