புதன்கிழமை, மே 20
Shadow

அருண்விஜய்யின் ”சினம்” படம் எப்படியிருக்கு? – கோடங்கி விமர்சனம் 3.5/5

 

 

அருண்விஜய்யின் ”சினம்” படம் எப்படியிருக்கு? – கோடங்கி விமர்சனம்

 

நேர்மையான காவல்துறை அதிகாரியான அருண் விஜய். அவருக்கு அழகான காதல் மனைவி. ஒரு குழந்தை. இனிமையாக செல்லும் காதல் வாழ்க்கையில் திடீரென பெரும் சோதனை. அதிர்ச்சி. இதற்கு என்ன காரணம்… யார் காரணம் என தேடிக் கண்டு பிடித்து யாரும் எதிர் பார்க்க முடியாத முடிவை சொல்வதுதான் சினம்.

காவல்துறை அதிகாரி என்றாலே முறுக்கு மீசை, மிடுக்கான தோற்றம், கம்பீரகுரல் என்றாலும் அருண்விஜய்க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் அத்தனை அழகாக இருக்கிறது. அதிலும் மீசையில்லாத போலீஸ் அதிகாரியாக நேர்மையாக இருந்து சினம் காட்டும்போது யதார்த்த லாஜிக் எல்லாம் உடைந்து போய் ஹீரோ செய்வது சரிதான் என்ற எண்ணத்தை ஏற்ப்படுத்துகிறது.

காதல் காட்சிகளில் அழகும், கதறி அழும் காட்சிகளில் பரிதாபமும் ஒருசேர வாங்கிக்கொள்கிறார் அருண்விஜய். சினம் கொண்டு அதிரடி காட்டும் போது அட்டே போட வைக்கிறார். மொத்தத்தில் அருண்விஜய் கேரியரில் சினம் தனி இடம் பிடிக்கும்.

அழகான ஹீரோயின் பாலக் லால்வாணி பேருக்கு ஏற்றார்போலவே கோதுமை அல்வா போல மென்மையாக அழகாக வருகிறார்.

காதல் காட்சிகளில் கண்ணில் நிற்கிறார். கடைசியில் அப்படி ஒரு துயரம் என்றதும் அது சினிமா என்பதை மறந்து பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

காளிவெங்கட் கொஞ்ச நேரம் வந்தாலும் கவனத்தை ஈர்க்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர் அதிகம் இல்லாமல் அளவாக இருக்கிறது. மறுமலர்ச்சி பாரதியின் டிவிஸ்ட் அருமை.

கதை,திரைக்கதைக்கு அடுத்தபடியாக இசையும் தான் ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது. ஷபீர் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் பட்த்துக்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவில் காதல் காட்சிகளில் மென்மையாகவும், கிளைமாக்ஸ் காட்சிகளில் ஷாக்கையும் ஏற்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் கோபி நாத்.

கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஒரு நல்ல படைப்பை அழுத்தமாக கொடுத்திருக்கிறார். நேர்மையானவர்களின் கடுங்கோபம் (சினம்) சரியானதுதான்.

அதில் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் கொடுக்கிற கொடூர தண்டனைகளும் சரிதான் என பார்க்கிறவர்கள் ஆமாம் போட வைக்கிற மாயாஜால வித்தையை இயக்குனர் அழகாக கையாண்டிருக்கிறார். அதை அப்படியே தன் கதாபாத்திரத்தில் கொண்டுவந்து சபாஷ் அள்ளிக்கொள்கிறார் அருண்விஜய்.

நேர்மையானவர்களின் கடுங்கோபம் (சினம்) தீயவர்களுக்கு தீப்பிழம்பாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது சினம். கொடுக்கும் காசுக்கு வஞ்சனை இல்லாமல் திருப்தியை தரும்.

 

-கோடங்கி

மதிப்பீடு 3.5/5

 

311 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன