செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து நூதன தண்டனை!

திருத்தணி காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதில் சில மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றித் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ்- 1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி திரிந்தனர்.

அப்போது மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரித்தார். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றிதிரிந்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் 3 பேருக்கும் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர் காதை மற்றொருவர் பிடித்தபடி அவர்கள் தோப்புகரணம் போட்டனர்.

மேலும் இனிமேல் பள்ளிக்கு ஓழுங்காக செல்வேன் என்றும் அவர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர் மாணவர்கள் 3 பே ரையும் தீயணைப்பு அலுவலர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பார்த்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

288 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன