
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.
இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘நான் டீசென்டான ஆளு’ பாடல் வெளியாகியுள்ளது. துரை வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
359 Views
