திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்ப்பை தூண்டும் அவதார் 2 !

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது.

படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.

தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது.

இதையடுத்து வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி தற்போது வரை ரூ.10 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன