செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

வெளியான வாரிசு டிரைலர் அறிவிப்பு!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

308 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன