
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் 2.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளுக்கு அவசரமாக வெளியேறினர்.
