வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5

கடந்த 8 ஆண்டுகளை விட 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. அதோடு இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இணைத்து தனது இயக்கத்தில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார் வேலன்.
கதைப்படி…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
சென்னை வந்த இடத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் மகன், ஒரு இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் என்ன செய்கிறார்கள், தவறு செய்தவனுக்கு என்ன நடக்கிறது… தண்டனை கிடைத்த்தா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜிக்கு இது, முதல் படமாம் . அப்படி தெரியாதது மாதிரி காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அனைத்திலும் நேர்த்தியாக நடித்து அசத்தி இருக்கிறார். அறிமுக நாயகி மதுனிகாவும் னல நல்ல தேர்வுதான். மழையில் நனைந்து ஆடும் ஆட்ட்த்தில் ரசிகர்களை இழுத்துக் கொ(ல்)ள்கிறார்.
ஹீரோயின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக வலம் வந்தாலும், இறுதியில் நல்லவனாக மாறிவிடுகிறார். இவர்தான் பட்த்தின் தயாரிப்பாளர் என்பதும் கூடுதல் தகவல்.
கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார்.ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன், நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கேமராமேன் ஆர்.வேல், தன் பங்களிப்பில் பாஸ் மார்க் வாங்கி பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். பரணியின் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் ஓகேதான்.
பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாகி போய் விட்டது. என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகள் வழியாக குற்றவாளிகள் தப்பித்து விடுவதால் இப்படிப்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன விதமான தண்டனைகள் அளிக்க முடியும் – அவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்று கொடுக்க முயற்சித்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் மெய்ப்பட செய் சொல்ல வேண்டிய மெய்!

கோடங்கி
மதிப்பீடு 3/5

207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன