வியாழக்கிழமை, ஜனவரி 15
Shadow

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

316 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன