வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: பா.இரஞ்சித்

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்!

தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
இணையத்தை கலக்கும் ‘தங்கலான்’ கெட்டப்பில் விக்ரமின் புகைபடம்!

இணையத்தை கலக்கும் ‘தங்கலான்’ கெட்டப்பில் விக்ரமின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. https://twitter.com/chiyaan/status/1626496992603168776?s=20...
பூஜையுடன் தொடங்கிய சியான் 61!

பூஜையுடன் தொடங்கிய சியான் 61!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், ஜி.வி. பிரகாஷ், கலையரசன், சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் 'சேத்துமான்' படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிந்து மாலினி இசையமைத்திருந்தார். கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இப்படம் அமைந்தது. அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வாயிருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் நடந்த 19-வது சென்னை திரைப்பட விழாவில் இப்படம் இரண்டாவது விருதைப்பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படம் வருகின்ற மே மாதம் 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக...
பா.இரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'விக்ரம்' திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மேடையில் பா.இரஞ்சித் அறிவித்தார்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துக்...
நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை 'நீலம் புரொடக்சன்ஸ்' சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு 'J.பேபி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. ...
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்! நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய்...
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.இரஞ்சித் படத்தின் சென்சார் அப்டேட்! இயக்குனர் பா.இரஞ்சித் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. அந்த வகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங...
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைக்கும் பா.இரஞ்சித்! அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பா.இரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித...
‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....