புதன்கிழமை, ஆகஸ்ட் 26
Shadow

2 ஜி வழக்கின் தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு உருவானது.

அதன் பின்னர்ஆ. ராசா கோவில்பாளையம் வழியாக காரில் அன்னூர் சென்றார். கோவில்பாளையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும் போது, 2 ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதில் ஊழல் இல்லை என நிரூபணமாகி இருக்கிறது. நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் உண்மை தன்மையை புரிந்துள்ளனர் என பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 2 ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

832 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன