வியாழக்கிழமை, அக்டோபர் 1
Shadow

விறுவிறுப்பாக தயாராகும் ‘லால் சலாம்’திரைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன