சனிக்கிழமை, மே 2
Shadow

ஜெயிலர் படத்தின் வசூலை நடிகர் விஜய்யின் லியோ படம் முறியடிக்குமா? அக்டோபர் 19ம் தேதி பலமுனை தாக்குதல்களை சந்திக்கும் விஜய்!

 

ஜெயிலர் படத்தின் வசூலை நடிகர் விஜய்யின் லியோ படம் முறியடிக்குமா? என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 19ம் தேதி பலமுனை தாக்குதல்களை விஜய் சந்திக்கிறார்.

#லியோ ரிலீஸ் ஆகும் அக்டோபர் 19ம் தேதி கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கோஸ்ட் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ரஜினிகாந்தின் #ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் கேமியோ ரோல் செய்த சம்பவம் காரணமாக கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலேயே சிவராஜ்குமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்து இருப்பது லியோ படத்துக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

அதோடு, லியோ படத்துக்கு இன்னொரு வில்லனாக மாறிவிட்டார் தெலுங்கு சினிமாவின் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா.

அவர் நடிப்பில் உருவாகி உள்ள #பகவந்த்கேசரி திரைப்படமும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் மேலும், ரவிதேஜா நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள #டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படம் அக்டோபர் 20ம் தேதி வெளியாகிறது.

இந்த படங்களை தவிர ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தமிழிலும் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர்சீஸ் வசூலுக்கும் பாலய்யா மற்றும் சிவராஜ்குமாரால் பெரிய தொல்லை இருக்கும் என தெரிகிறது.

இப்படி செம செக்மேட் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை அனைத்தையும் முறியடித்து விட்டு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இண்டஸ்ட்ரி ஹிட் படைப்பாரா விஜய்? 

245 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன