புதன்கிழமை, மே 20
Shadow

சித்தார்த் நடிக்கும் சித்தா படத்தை ரெட் ஜெயண்ட் 28ம் தேதி ரிலீஸ் செய்கிறது!

 

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.

திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.28ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது.

கதாநாயகன் சித்தார்த் என்பதால் அவரது பெயரில் பாதியை இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனரோ என்று பலரும் கேட்கிறார்களாம். அது காரணமல்ல என படக்குழு மறுத்துள்ளது. ‘‘என்னுடைய நண்பரான விஜய் சேதுபதியும் இதையேதான் கேட்டார்.

காரணம் விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என மூன்று படங்களை இயக்கியுள்ளார் அருண். “அவற்றுள் ‘சேதுபதி’ என்று அவருடைய பெயரில் பாதியை ஒரு படத்துக்குத் தலைப்பாக்கி உள்ளார்.

அந்த வழக்கத்தைப் பின்பற்றி ‘சித்தா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதா என்று சேதுபதி வேடிக்கையாகக் கேட்டார். “இந்தப் படத்துக்கு முதலில் வேறு ஒரு பெயரைத்தான் சூட்டியிருந்தோம். ஒரு சிறுமிக்கும் அவளுடைய சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கதைப்படி அந்தக் குழந்தை சித்தப்பாவை ‘சித்தா’ என்றுதான் கூப்பிடும். அதையே படத்துக்குப் பெயராக வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

“காரணம், உறவுமுறைகளைச் செல்லமாக அழைப்பது போன்ற பெயர்களுக்கு ஒரு பலம் இருக்கும். அது படம் பார்த்து முடித்த பிறகும் ரசிகர்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதினோம். “இந்தப் படம் வெளியான பிறகு குழந்தைகள் எல்லாரும் சித்தப்பாவை ‘சித்தா’ என்றுதான் அழைப்பார்கள் என நம்புகிறேன்,” என்கிறார் சித்தார்த்.

இவர் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகளாகிவிட்டன. ஒரு படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்படுகிறதோ, இறுதி வரை அந்த நோக்கம் நீடிக்க வேண்டும் என்றும் அதுதான் தனது கனவுப் படமாக இருக்கும் என்றும் கருதினாராம்.

தனது கனவை ‘சித்தா’ படம் நிறைவேற்றி உள்ளதாகச் சொல்கிறார். மேலும், தனது கனவுப் படத்தை தாமே தயாரித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும்தான் தனது குருக்கள் என்று குறிப்பிடும் சித்தார்த், இருவரிடமும் தாம் திரையுலகம் தொடர்பான பல்வேறு நுணுக்கங் களைக் கற்றுத் தேர்ந்துள்ளதாகச் சொல்கிறார். ‘சித்தா’ படத்தில் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நிமிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

177 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன