சனிக்கிழமை, செப்டம்பர் 5
Shadow

அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்!

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்!

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலா  இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

294 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன