திங்கட்கிழமை, ஜூன் 29
Shadow

ஃபைட் கிளப் 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’ (Fight Club). இந்த படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், பைட் கிளப் படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 5 கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதாகவும் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

228 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன