புதன்கிழமை, மே 15
Shadow

முழுமையான டார்க் காமெடி படமாம் “அய்யய்யோ “

 

 

‘அய்யய்யோ’ இது இயக்குனர் யார் கண்ணன் அவர்களின் உதவி இயக்குனரான சிவகணேசன் அவர்கள் பாக்கியராஜ், ஹரிகுமார் ராஜன் ஆகியோருடன் இணைந்து முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு இயக்கி இருக்கும் தமிழ் திரைப்படம்.இதுவரை தமிழில் தொடப்படாத கதைக்களமான ‘கேனிபலிசம்’ பற்றிய படம் இது.

ஒரு திரைப்படம், அதில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்கள் செய்யும் சேட்டைகளால் அந்தத் திரைப்படம் நிறைந்திருக்கும் தானே, அப்படிப்பட்ட பல சேட்டைகளை கொண்ட திரைப்படம் ‘அய்யய்யோ’.இதில் வரும் மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்க பிளான் செய்யும் காமெடி, வலிப்புக்கு சாவி கொடுக்கும் காமெடி, கம்பவுண்டரிடமிருந்து மனநலம் பாதித்தவர்கள் சாவியை திருடும் காமெடிகள் நம்மை முதல் பகுதியில் சிரிக்க வைக்கின்றன.

மனநல காப்பகத்தில் இருந்து வில்லன் மனநலம் பாதித்தவர்களை தப்பிக்க வைக்க கூறப்படும் காரணம் பகீர் ரகம். முன்பே சொன்னதைப் போல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கேனிபலிசத்தை சுற்றி பின்னப்பட்டுள்ளது. கேனிபலிசம் என்றால் ஒரு இனம் தான் சார்ந்த அதே இனத்தை உண்பது ஆகும். அந்த வகையில், சில கொலைகளும், இன்னும் பல திகில் காட்சிகளும் படத்தின் இரண்டாம் பகுதியை ஆக்கிரமித்து இருக்கின்றன.

இந்தத் திரைப்படம் ‘டார்க் காமெடி திரில்லர்’ வகையை சார்ந்தது ஆகும். மார்ச் ஒன்றில் தமிழகத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம்,
தமிழக கேரள எல்லை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

30 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன