திங்கட்கிழமை, ஜூன் 24
Shadow

“நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச்” கமெண்ட் அடித்த இசைஞானிஇளையராஜா!

 

“நான் எங்க போட்டோ பார்த்தேன் போஸ் தானே குடுக்க சொன்னீங்க ” நச் கமெண்ட் அடித்த #இசைஞானிஇளையராஜா!
இசைஞானி இளையராஜா அவர்களின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு #தமிழ்திரைப்படபத்திரிகையாளர்சங்கத்தின் சார்பில் ராஜா சாரின் ஸ்டுடியோவில் அவரை சந்தித்து அழகிய புகைப்படம் ஒன்றை பரிசளித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்
தான் மிகவும் நேசித்த மகள் பவதாரணி மறைவை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாட்டத்தை தவிர்ப்பார் என எண்ணியிருந்தோம் யாரையும் சந்திக்க மாட்டார் என்று நினைத்திருந்தோம்
ஆனால் அனைவரின் நினைவை மாற்றி காலையிலிருந்து ஏராளமான ரசிகர்களை சந்தித்து அவர்களோடு தனித்தனியாக புகைப்படம் எடுத்து வந்தவர்களுக்கு உணவும் அளித்து அனுப்பி வைத்தார் ராஜா.
ஒரு இசை நிகழ்ச்சியில் அவரை எடுத்த புகைப்படத்தை தான் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசாக வழங்கியிருந்தோம் இந்த புகைப்படத்தை கொடுக்கும் போது ”சார் இந்த போட்டோவ நீங்க பார்க்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் சார்” என்று சொன்னேன் சரி என இந்த போட்டோவை பார்ப்பது போல போஸ் கொடுத்தார் ராஜா சார்…
”சார் போட்டோ எப்படி இருக்கு சார்” அப்படின்னு கேட்டேன்
உடனே ராஜா சார் “போட்டோ பாக்குற மாதிரி போஸ் தானே குடுக்க சொன்னீங்க நான் இன்னும் ஃபோட்டோவே பார்க்கலையே அப்படின்னு போட்டாரே ஒரு போடு “
இப்படியாக இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாளில் அவரை சந்தித்த மறக்க முடியாத நிகழ்வாக இந்த சந்திப்பு மாறிப்போனது
இந்த புகைப்படத்தை தேடி எடுத்துக் கொடுத்து இந்த சந்திப்புக்கு முக்கிய காரணமாக இருந்த சங்கத்தினுடைய தலைவர் கவிதா அவர்களுக்கும், போட்டோ பிரேம் ஆக ஒரே இரவில் அவசர அவசரமாக செய்தாலும் மிக அழகாக நேர்த்தியாக மிகப் பிரமாதமாக ஒரு அடையாளமாக செய்து கொடுத்த தம்பி “ஷாலினி TV” ஹரிக்கும் பெரிய மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் இந்த நேரத்துல சொல்றது தப்பு இல்ல…
– கோடங்கி ஆபிரகாம்
60 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன